2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

போக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி

Shanmugan Murugavel   / 2021 மே 22 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் போக்குவரத்து மீறல்களை கண்காணிக்க ஈ-ட்ரபிக் (eTraffic) எனும் திறன்பேசி செயலியொன்றை இலங்கைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  

இச்செயலியானது தற்போது அன்ட்ரோய்ட் பயனர்களுக்காக கூகுள் பிளேஸ்டோரில் காணப்படுகின்றது.

செயலியில் மக்கள் பதிவு செய்ய முடியுமென்பதுடன், ஒவ்வொரு நாளும் தாங்கள் சந்திக்கும் போக்குவரத்து மீறல்களை அறிக்கையிட முடியும்.

இச்செயலியினூடாக புகைப்படங்களையும், காணொளிகளையும் மக்கள் பகிர முடியுமென்ற நிலையில், தேவையான நடவடிக்கைகளை அதிகாரங்களை எடுக்க முடியும்.

இச்செயலில் இத்தொடுப்பு மூலம் தரவிறக்கிக் கொள்ள முடியும் -  https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .