Freelancer / 2022 ஜனவரி 23 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரி வாயு தானாக வெடிக்காது, எரிவாயு தன்னிச்சையாக வெடிக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை என்று தெரிவித்த நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஏன் நீக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கேஸ் நிறுவன தலைவரை ஜனாதிபதி நீக்கவில்லை. ஜனாதிபதி என்ற முறையில் பதவி விலகுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் அவருக்கு உள்ளது என்றார்.
எரிவாயு வெடிப்பு பற்றி விசாரணை நடத்த ஆரம்பத்திலே கோரிக்கை விடுத்தேன். இந்த எரிவாயு தன்னிச்சையாக வெடிக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை. ஆனால் இது கவனிக்க வேண்டிய விடயம் இதைப் பற்றித் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்த போது எங்களில் சிலர் சிரித்தார்கள் என சுட்டிக்காட்டினார்.
தேவாலயத்திற்குச் சென்று வெடிகுண்டுகளை வைக்கின்றார்கள். இப்போது யாரும் தலைமறைவானவரைக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும். யாரிடம் இந்த வெடிகுண்டுகள் இருந்தன, யார் இதற்கு பின்னணியில் இருக்கிறார்கள். இதில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை எதிர்காலத்தில் அறியலாம் என்றார்.
ஜனாதிபதி பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதியாக அவர் சரியான முடிவுகளை எடுக்கிறார். அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை நியமிக்கவும் நீக்கவும் அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த எரிவாயு வெடிப்பைப் பற்றி நான் விசாரணை நடத்த வேண்டும், நிச்சயமாக இந்த குழுவைப் பற்றி கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தேவாலயத்தில் குண்டு வைத்து போன்று நாட்டின் தேசிய பாதுகாப்பை குழப்ப முயல்வது குறித்து கண்டறியுமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என்றார்.
3 minute ago
3 minute ago
8 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 minute ago
8 minute ago
11 minute ago