2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

கைதிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுமா?

Nirosh   / 2021 ஜூன் 13 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு இதுவரையில் எவ்விதமானத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பாரியளவானோருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தபோதிலும், இதுவரையில் தொற்றுக்குள்ளாகி எவரும் உயிரிழக்கவில்லை என்றார்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு, சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .