2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

முதலீட்டுச் சபை ஆசனங்கள் கவிழ்ந்தன

Freelancer   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாகவும் இராஜினாமா கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்துக்கு, இன்று (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் சஞ்சய மொஹொத்தல, நிர்வாக சபை உறுப்பினர்களான ஹர்ஷ சுபசிங்க, கலாநிதி ஹர்ஷ கப்ரால் சஞ்சய குலதுங்க மற்றும் ஜயமின் பெல்பொல ஆகியோர் இராஜினாமாச் செய்துள்ளனர்.

இதேவேளை, முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை முதலீட்டுச் சபைக்கு பல அதிகாரிகளை மிக அதிக சம்பளத்தில் சேர்த்துக் கொண்டு அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக இலங்கை முதலீட்டுச் சபை  அண்மையில் பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழுவில் குற்றம் சாட்டப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள மனுவில், முதலீட்டுச் சபையின் 1,100 ஊழியர்களில் சுமார் 150 பேர் இன்று (02) வரை கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .