Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து
கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து
சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும்
தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
42 மற்றும் 59 ஆசனங்களைக் கொண்ட பஸ்களை, கிடைக்கும் எரிபொருள் கோட்டாவின் மூலம்
தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியாது என சுட்டிக்காட்டினார்.
குறைந்தபட்ச எரிபொருளாக வேன்களுக்கு 40 லீற்றரும் பஸ்களுக்கு 100 லீற்றரும் வழங்கப்பட
வேண்டும் என அவர் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த அவர், தமது கோரிக்கை
நிறைவேற்றப்படும் பட்சத்தில் கட்டணம் குறைக்கப்படும் என்றார். R
2 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025