2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலுள்ள பாடசாலைகளை மீளத்திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புகிறது என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீளத்திறக்க முன்னர், ஓகஸ்ட் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்க முடியும் என்று அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ், ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில்  பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றார்.

செப்டெம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .