2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

எல்பிட்டிய தேர்தல் மனு ஒத்திவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நாளை (25) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த மூவர் இணைந்து தாக்கல் செய்த குறித்த மனு,  புவனேக அலுவிஹார மற்றும் காமின அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபைக்கு பொறுப்பான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர், பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடாமல் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .