2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

’ரத்வத்தவிடமுள்ள அனைத்தையும் பறிக்க வேண்டும்’

Nirosh   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு தகுதியற்ற முறையில் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பறிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகிப்பதற்கு லொஹான் ரத்வத்தவுக்க தகுதியும் இல்லை. சிறைச்சாலைகள் அல்ல ஹோட்டல்களில் கூட இதுபோன்று செயற்படும் நபர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதற்கு ஜனாதிபதி இடமளிக்க கூடாது  எனவும் தெரிவித்தார்.

துப்பாக்கி முனையில் நபர்களை அச்சுறுத்துவது பாரதூரமான குற்றச் செயல் எனவும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் லொஹான் ரத்வத்தவை உடனடியாக கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்டப் பாவனைகளுக்காக துப்பாக்கிகளை வைத்திருக்க முடியும். எனினும் அதனை தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும்போது மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை லொஹான் ரத்வத்தவிடமுள்ள ஏனைய அமைச்சுக்கள் பறிக்கப்படுமா இல்லையா என்பதை அரசாங்கம் விரைவாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X