2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பங்காளிக்கட்சிகள் - பிரதமர் இன்று சந்திப்பு

J.A. George   / 2021 செப்டெம்பர் 23 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று(23) கலந்துரையாடவுள்ளனர்.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன கேள்வி பத்திரம் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், இன்று பிற்பகல் வரை இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் 4.30 மணியளவில் ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையேயான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X