2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு மாத்திரமே இதற்கு அனுமதி

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மாத்திரமே, கொழும்பு மாவட்டத்தில் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க முடியுமென, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த முறைகளை விட, இம்முறை இந்த விடயம் குறித்து  தீவிர கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளும் இது தொடர்பான சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் நடமாடும் வர்த்தகர்களிடம் பொருள்களை கொள்வனவு செய்யும் போது, ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் அது குறித்து, மாவட்ட செயலாளர் அலுவலகம், கிராம உத்தியோகத்தர் அல்லது நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X