Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியை எரித்து போராட்டமொன்று, இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (17) காலை, நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில், நுவரெலியா மாவட்ட பயிர்ச் செய்கையாளர்கள் ஒன்றிணைந்து, அங்கிருந்து பேரணியாக தபால் நிலையத்துக்கு முன்பாக வரை சென்றனர்.
இந்தப் போராட்டத்தில், பெருந்திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பேரணியில் ஈடுபட்டவர்கள், பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பின்னர், தபால் நிலையத்துக்கு முன்பாக, போராட்டத்தை முன்னெடுத்தனர்.
'உரத் தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
'உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழிக்க வேண்டாம். கொரோதனா பரவலுக்கு மத்தியில் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்' என, போராட்டகாரர்கள், இதன்போது தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு, பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களும் கடைகளை மூடி, ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
3 hours ago