2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

பெண்ணிடம் செருப்பில் அடிவாங்கிய அமைச்சர் யார்?

Editorial   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, அந்த அமைச்சர் யார்? என வினவினார்.

இதேவேளை, உயர்த்த ஞாயிறுத் தொடர்பில் விசாரணைகளை மேற்​​கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய உப-குழுவை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கவில்லை.

அதேபோல, இந்த சபைக்குள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் உள்ளனர். அதனால்தான் தான், உப-குழுவை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் யார், சித்தியடையாதவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல்களை தரவும் எனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .