2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு

Nirosh   / 2021 ஜூன் 15 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள மீனவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படவேண்டுமெனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்வுக்குப் பின்னர், விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு  வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவை, கப்பல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் வழங்கப்படுமெனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .