2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மைத்திரிக்கு அறிவித்தார் சபாநாயகர்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமராகச் செயற்படுவதற்கு, ​ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் உயரிய நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் நம்பிக்கைப் பிரேரணை, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கமைய விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (12) நிறைவேற்றப்பட்டதென, சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, உத்தியோகபூர்வமாக அறிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சபாநாயகர், நாடாளுமன்றம்  நேற்று (12) கூடியபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால், இந்த நம்பிக்கைப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதென்றும் அதன் பின்னர் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன், 117 பெரும்பான்மை வாக்குகளுடன், பிரேரணை நிறைவேற்றப்பட்டதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில், இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக, சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கும் நம்பிக்கை, உரிய முறையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .