2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

செந்தில் தொண்டமானின் முயற்சியால் பி.சி.ஆர் இயந்திரம்

Freelancer   / 2021 ஜூன் 09 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் முயற்சியால், பி.சி.ஆர் இயந்திரமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இயந்திரம், சுகாதார ​அமைச்சின் பரிந்துரைக்கமைய தியத்தலாவை வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளது.

சுமார் 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த பி.சி.ஆர் இயந்திரம், இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தால், இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜய பெட்டினால், இந்த இயந்திரத்துக்கான ஆவணங்களும் இயந்திரமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .