2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘போகம்பரை நேரக்குண்டு’

Editorial   / 2020 நவம்பர் 18 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி போகம்பர சிறைச்சாலையை நாங்கள் மறுசீரமைத்தோம், அங்குச் சென்று நாளொன்றை கழிக்கும் வகையிலான ஏற்பாடுகளை முன்னெடுத்திருத்​தோம் எனத் தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கண்டி, போகம்ப​ர சிறைச்சாலை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் 100 பேர் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 800 பேர் இருக்கின்றனர். கைதிகள் தப்பியோடுவதற்கு முயன்ற போது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. அதில் கை​தியொருவர் மரணித்துள்ளார் மற்றுமொருவர் தப்பியோடியுள்ளார்” என்றார்.  

போகம்பர ஒரு நேரக்குண்டு, எப்போது வெடிக்கும் என்றே தெரியாது. ஆகையால், ​அரசாங்கம் கலந்துரையாடி, போகம்ப​ர ​பழைய சிறைச்சாலையிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையத்தை அகற்றி, பரந்தளவில் இடமிருக்கும் இடங்களுக்கு மாற்றவும் எனக் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .