2021 ஜூலை 28, புதன்கிழமை

காட்டுப் பன்றியென நினைத்து சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்

R.Maheshwary   / 2021 ஜூன் 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை- இரத்தோட்டை பொல்வத்த பிரதேசத்திலுள்ள  மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று  (8) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான கயான் ஜயவர்தன என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனினும் காட்டுப்பன்றியே தனது மிளகுத் தோட்டத்துக்குள் நுழைந்து விட்டதாக நினைத்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கியுடன் இரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .