Nirosh / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி நவன்டாண்குளம் பிரதேசத்தில் இன்று (17) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியொன்றும், புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்விபத்தின்போது இரு லொறிகளிலும் பயணித்த ஐவர் படுகாயமடைந்ததுடன், அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
விபத்தால் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் நவன்டாண்குளம் பகுயில் சில மணி நேரம் போக்குவரத்துக்கள் தடைப்பட்டதுடன், இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
முந்தல் பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வந்ததுடன், மேலதிக விசாரனைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025