2021 ஜூலை 31, சனிக்கிழமை

அமைச்சர் பேரியல் அஷ்ரபின் ஆதரவாளர் சுட்டுக்கொலை;இருவர் காயம்

Super User   / 2010 மார்ச் 23 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE அமைச்சர் பேரியல் அஷ்ரபின் ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என அம்பாறையிலிருந்து முக்கிய பிரமுகரொருவர்  சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இன்று இரவு 9.00மணியளவில் இச்சம்பவம் அம்பாறை நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வீரக்கொட என்னுமிடத்தில்  இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவொன்றில் மேற்படி மூன்று பேரும் செல்லும்போடு ஊர்காவல் படையினரின் சோதனைச்சாவடியில் வைத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்பாறை மத்திய முகாம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இறந்தவர் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் அமைச்சர் பேரியல் அஷ்ரப்  போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக அம்பாறை மத்திய முகாம் பொலீஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டது.

பிரதிப்பொலீஸ் மா அதிபர் வருகை தந்துள்ளதால் கதைக்க முடியவில்லை என பொலீஸ் அதிகாரியொருவர் எமக்குத்தெரிவித்தார்.

எனினும் மேலதிக விவரங்களைப்பெற தமிழ்மிரர் இணையதளம் முயற்சித்துக்கொண்டிரு
க்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .