2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: சட்டமா அதிபர் கடிதம்

Editorial   / 2021 மே 15 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ​பொலிஸ் அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த தாக்குதல் தொடர்பில், சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் மேற்கோள்கள் இருக்குமாயின், அதனை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான சந்தேக நபர்களில், 42 பேர், “ஏ” குழு சந்தேகநபர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையால், தன்னுடைய பதவிக்காலத்தின் போது, அந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, இம்மாத இறுதியில், பதவியிலிருந்து முழுமையாக ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .