2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கொழும்பு மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தேசியப்பட்டியலில்?

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE கொழும்பு மாவட்ட அமைப்பாளரும்,ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளருமான ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து,ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு கொழும்பில் இயங்கும் பல்வேறு சமூக சேவா அமைப்புக்கள்,முஸ்லிம் பள்ளி வாசல்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மகஜர்களை அனுப்பியுள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் சுமார் 38 ஆயிரம் வாக்குகளைப்பெற்று ஒன்பதாவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஏழு ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பில் போட்டியிட்ட மூன்று ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும்,கொழும்பு மத்திய தொகுதியில் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களை விட முஸம்மில் முன்னணியில் கானப்படுகின்றார்.

இவருக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .