Editorial / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாலபே அல்லது பத்தரமுல்லையை முகவரிகளாகக் கொண்டிருக்கும் “பொப்மாலி” என்றழைக்கப்படும் களுத்துறை சந்தித தாப்ருவே என்பவரை கண்டால், அறிவிக்குமாறு பொலிஸ் அறிவித்துள்ளது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் போதைப்பொருள் பணியகம், 071-8592727 அல்லது 011-2343333-4 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று, பேருவளை கடலில் வைத்து 288 கிலோ 644 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பிரதான காரணகர்த்தவாக “பொப்மாலி” யே இருந்துள்ளார் என தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதான அவர், நீண்டநாள் மீன்பிடியில் ஈடுபடுவதை தொழிலாக செய்கின்றார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .