Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2022 ஜூலை 06, புதன்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
இந்தாண்டுக்கா முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது, நாட்டின் அப்பாவி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வரவு செலவுத் திட்டமென, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான, 5ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமானது, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான, வரவு செலவுத் திட்டமாகும் என்றார்.
நாட்டின் செலவுகளைப் பார்த்தால் ஆச்சரியமாகவுள்ளது என தெரிவித்த அவர், எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என்றார். இவ்வாறான பாரிய இடைவெளியுடனான வரவு செலவுத்திட்டத்தை இதுவரைக் கண்டதில்லையெனவும், இவ்வாறு இருக்கும் போது, மிகவும் சிந்தனையுடன் நாட்டின் எதிர்காலத்தைப் பார்த்து, பல யோசனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.
இதற்கமைய, இலங்கையில் அதிக நிபுணர்களை உருவாக்குவதற்காக, இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைப் போன்று, சுகாதாரத் துறைக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கம்பெரலிய திட்டத்தால் கிராமங்களை கட்டியெழுப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவத்தார். எனவே, இந்த வரவு செலவுத் திட்டமானது, நாட்டின் அப்பாவி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது, அவர்களுக்கு பிரயோசமான வரவு செலவுத் திட்டமாகுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இதன்போது, குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட புத்தகத்தை புரட்டி அவர் சொன்னதையே நீங்கள் சொல்ல வேண்டாம் எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, நான் அவர் கூறியவற்றைக் கூறவில்லை மாறாக அதில் உள்ள நல்ல விடயங்களையே இங்கு கூறினேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago