J.A. George / 2021 ஜூலை 26 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் உபேக்ஷா சுவர்ணமாலி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பொலிஸ் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் உபேக்ஷா செலுத்திய வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், மோட்டார் வாகன பரிசோதகர் ஒருவரினால் இந்த வாகனம் சோதனையிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா பயணித்த வாகனம் மோதியுள்ளது.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
59 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
23 Nov 2025
23 Nov 2025