Freelancer / 2023 மார்ச் 24 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளை ஜூலை 05 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு, அன்றைய தினம் வரை வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (a)
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago