2021 ஜூலை 28, புதன்கிழமை

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.ரி.சகாதேவராஜா

 

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம்  தொடர்பாக, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் சமல் ராஸபக்ஷவை நேற்று (05) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பாராளுமன்ற  உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், கோவிந்தன் கருணாகரன் வினோநோகராதலிங்கம், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், எஸ். சிறிதரன், இரா.சாணக்கியன் ஆகியோரே, இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்துக்கு அதிகாரங்களை வழங்குதல் தொடர்பாக இவர்கள் இதன்போது பேசியுள்ளனர்.

கடந்த முப்பது வருடங்களாக, காணி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பெயரை, உப பிரதேச செயலகமாகப் பயன்படுத்தமாறு வெளியாகிய அறிவித்தலால், பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பாராளுமன்றத்திலும் இது தொடர்பில்  விவாதிக்கப்பட்டது.

குறித்த அறிவித்தல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது விடயத்தில் விரைவாகத் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்த அரசாங்கம், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .