Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூன் 20 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணக்கட்டுப்பாடுகள் சட்டத்தை மீறி, விருந்துபசாரம் நடத்திய தலவாக்கலை- லிந்துலை நகர சபையின் தவிசாளர் பி.பாரதிதாஸன் உள்ளிட் ஏழுபேர், இன்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தவிசாளர், தனக்கு வேண்டிய சிலரை அழைத்துக்கொண்டு, தலவாக்கலை மேல் கொத்தமலை நீர்த்தேகம் அமைந்திருக்கும் மலையின் உச்சிலுள்ள தனிப்பட்ட உற்சவ மண்டபத்தில், இவ்வாறு விருந்துபசாரம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரா இருந்தாலும், ஆதரவாளர்கள் சிலரை தம்பக்கம் இழுத்து, தனக்கு மட்டுமே ஆதரவளிக்கும் வகையில் அவர்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
119 என்ற அவசர இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பையடுத்தே, அங்குச் சென்ற பொலிஸார், இவர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அவ்விடத்துக்கு வருவதை அவதானித்த இன்னும் சிலர், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அந்த விருந்துபசாரத்துக்கு தவிசாளர் வருகைதந்ததாகக் கூறப்படும் நகர சபைக்குச் சொந்தமான வாகனமும் கைப்பற்றப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டவரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராகவும், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என கொட்டகலை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சின்னம் ‘சேவல்’ என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago