ஆர்.மகேஸ்வரி / 2018 ஜூன் 20 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான ஆவணங்கள், சட்டரீதியாகக் கிடைக்கும் வரை, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்த வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து,
நாடாளுமன்றத்தின் நாமத்துக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாமென்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் நேற்று (19) இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மேற்படி விவகாரம் தொடர்பான சட்டரீதியான ஆவணங்கள் எவையும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அதுவரை, ஊடகங்கள் வாயிலாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தி, நாடாளுமன்றத்தின் நாமத்துக்கும் உறுப்பினர்களின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு, ஊடகங்களிடமும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வினயமாகக் கேட்டுக்கொண்டார்
“விசாரணை அறிக்கையின் சி.350- 360 வரையான 3 தொகுதிகள் கொண்ட ஆவணங்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது தொடர்பில், இம்மாதம் 5ஆம் திகதியன்று, கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக, அதிலொரு தொகுதியான, சி 1- 340 வரையான பகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றார்.
மேற்படி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி செயலாளரால் தனக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்த சபாநாயகர், குறித்த ஆவணம், முழுமையான ஆவணமாகச் சட்டரீதியாகக் கிடைக்கும் வரை, பொய்யான தகவல்கள், குற்றச்சாட்டுகளை சுமத்துவதிலிருந்து அனைவரும் தவிர்த்துக்கொள்வது சிறந்ததென்றார்.
6 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025