2022 மே 18, புதன்கிழமை

மீயுயர் சபையில் உணவுக்கு ரூ. 9 கோடி செலவு

Freelancer   / 2022 ஜனவரி 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்கு வரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு மாத்திரம் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தின் பல்வேறு குழுக் கூட்டங்களுக்கு வருகை தரும் அரசாங்க அதிகாரிகளின் உணவுத் தேவைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்த்தி செய்கிறார்கள் என்றும் அவையும் இந்தச் செலவில் அடங்கும் என்றும் தெரவிக்கப்படுகிறது

இதேவேளை, பல்வேறு ஊழல்கள் மற்றும் வீண்விரயங்கள் காரணமாக பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் இழக்கப்படுவதை தடுக்கும் வகையில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அண்மைக்காலமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேறும் போது அவர்களின் உடைமைகளை சோதனை செய்வதும் ஒரு படியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரிசி, மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .