Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
J.A. George / 2021 ஜூன் 17 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையவழியில் மதுபான விநியோகம் மேற்கொள்ளும் முறைமைக்கு கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையம் அனுமதி அளிக்கவில்லை என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அதனை தவிர்க்கும் விதமாக இணையத்தளம் ஊடாக பல்பொருள் அங்காடிகள் ஊடாக மதுபான விற்பனைக்கு செய்ய அனுமதி வழங்குமாறு பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் மேற்கொள்ளுமாறு இலங்கை மதுவரி திணைக்கள ஆணையாளரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதியமைச்சு நேற்று (16) அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், இதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், மதுபான அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில், இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago