2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

பிரியந்தவின் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும்

Freelancer   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் சியால்கோட்டில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட இலங்கை முகாமையாளரான பிரியந்த குமாரவின் மாதாந்தச் சம்பளம் அவரின் குடும்பத்துக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், சியால்கோட் வணிகர்களால் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு பிரதமரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளை விடுத்தார்.

இதேவேளை, பிரியந்தவை கொலைக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னான் என்பவருக்கு தம்கா ஐ ஷுஷாத் விருதையும் பாகிஸ்தான் பிரதமர் வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .