Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 பிரதான பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி புறக்கணித்துள்ளார் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, பங்காளி கட்சிகளை ஜனாதிபதி புறக்கணிப்பது ஒன்றும் புதிதல்ல என்றார்.
பங்காளி கட்சியின் தலைவர்கள் அரசாங்கத்தில் மூன்றாம் தரப்பினரை போன்று
செயற்படுகிறார்கள்.தம்மை தெரிவு செய்த மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியினராக செயற்பட வேண்டும்.
ஆனால் அவர்கள் அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டார்கள்.மக்களின் நிலைப்பாட்டை காட்டிலும் அவர்களுக்கு தங்களின் சுய
தேவைகள் மாத்திரம் முக்கியமானதாக உள்ளது என்றார்.
பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவது பயனற்றது என்ற நிலைப்பாட்டில்
ஜனாதிபதி உள்ளார். பங்காளி கட்சிகளின் ஆதரவு இருந்தாலும்,இல்லாவிட்டாலும்,அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி,உட்பட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை
பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.சுதந்திர
கட்சியின் கொள்கையை அவமதிக்கும் வகையில் கருத்துரைக்கிறார்கள்.வெட்கமில்லாமல் சுதந்திர கட்சியினர் தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒன்றினைந்து செயற்படுகிறார்கள் என்றார்.
19 minute ago
24 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
41 minute ago
47 minute ago