2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

பாணந்துறையில் இளைஞன் கொலை

J.A. George   / 2023 ஜூன் 01 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை வேகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக  வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காயமடைந்த இளைஞர் ஆடைத் தொழிற்சாலை வளாகத்துக்கு ஓடியுள்ளார்.

எனினும், அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இளைஞனை வாளால் தாக்கிய விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X