2021 டிசெம்பர் 02, வியாழக்கிழமை

’அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் தொடர்பில் அவதானம் வேண்டும்'

Freelancer   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது சாதாரணமான விடயம் அல்ல என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக மரணங்கள் அதிகரித்தனவா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் இந்த கட்டத்தில் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது என்றும், கொரோனா மரணங்களில் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமாக நிகழக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும், தொற்றுநோயியல் பிரிவு, மரணங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்கும் எனவும் தெரிவித்தார்.

நமக்கே தெரியாமல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது சந்தேகமே என்று தெரிவித்த அவர், இந்த நிலை காரணமாக அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X