Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஜூன் 14 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் இன்று (14) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago