2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

திலங்க சுமதிபாலவின் நியமனத்துக்கு ஜே.வி.பி எதிர்ப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கோப் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

நிலையியல் கட்டளைச்சட்டம் 127(3) கீழ் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடிப்படையில் திலங்க சுமதிபால கோப் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

 திலங்க சுமதிபாலவுக்கு எதிராக கோப் குழுவில் விசாரணை இடம்பெறுகின்ற நிலையில், விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை குழுவுக்குத் தெரிவு செய்வதை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .