2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

சார்க் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி - இந்தியப் பிரதமர் பேச்சு-ஜீ.எல்.பீரிஸ்

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூட்டானில்  நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு  மஹிந்த ராஜபக்ஸ விளக்கமளிக்கவிருப்பதாகவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கையின் நட்பு நாடும், அயல் நாடும்  இந்தியாவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X