Freelancer / 2021 நவம்பர் 27 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரிடமிருந்து, கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பல்வேறு தோட்டாக்கள் என்பன இன்று (27) பிற்பகல் விசேட பொலிஸ் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெலிபென்ன, கல்மட்ட, நவ மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரான சந்தேகநபர், துப்பாக்கி, ஒரு கைக்குண்டு மற்றும் 350க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் வெலிபென்ன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரின் ஆயுதக் களஞ்சியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
1 hours ago