2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

’பிச்சை வேண்டாம்’

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ் 

1,000 ரூபாயைக் கையில் கொடுப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்த  ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, ஆகையால், நாளொன்றுக்கு வழங்கப்படும் 200 ரூபாய்,

 போக்குவரத்து கொடுப்பனவான 50 ரூபாய் ஆகியன அடிப்படைச் சம்பளத்தில் இணைந்து வழங்கப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட இ.தொ.கா தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமாறு ஆறுமுகன் தொண்டமான், தாங்கள் பிச்னை கேட்டவில்லை என்றார். 

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 

1992 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்ட போது இருந்த நிலையில், பெருந்தோட்டங்களோ, நிறுவனங்ளோ இன்றில்லை. பெருந்தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. கம்பனிகள் வளர்ச்சியடைந்துள்ளன. குளவித்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டார். 

சிறுத்தைகள் சீறுகின்றன, மழை, பணிக்கு, வெள்ளம், மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் மலையேறுகின்ற போது, புலிகளும், பன்றிகளும் தாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.  

உணவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளுடன் 1,000 ரூபாய் அதிகரிப்பை இணைந்து வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு நாங்கள் ஒருபோதும் இணங்கமாட்டோம்.  

500 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை 525 ரூபாய், 530 ரூபாயெனச் சென்று, 600 ரூபாய்க்குச் சென்றது. ஆட்சிமாற்றத்தின் பின்னர், மஹிந்த ராஜபக் பிரதமாரானார். அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, 700 ரூபாய் தருவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கியிருந்து. 

எனினும், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், 600 ரூபாய் தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துவிட்டது என்றும் தொண்டமான் தெரிவித்தார்.  

சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் கயிறு இழுத்தலே முன்னெடுக்கப்படுகின்றது என்று தெரிவித்த அவர், தங்காலையில் இடம்பெற்ற திருமண வைபவத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்படி விவாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றார். 

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (25) இடம்பெறும் அதில், நிதியமைச்சின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்த அவர், நிறுவனங்கள் இலாபமீட்டுகின்றன. அவற்றை, மக்களுக்கு கொடுப்பதற்கு மறுக்கின்றனர் என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .