2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

‘பதிலளிக்க காலஅவகாசம் கோரினார் பவித்ரா’

Nirosh   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பா.நிரோஸ்)

கொரோனா வைரஸ் தொடர்பில் 11 தடவைகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும், 15 தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் தன்னிடம் வினவியுள்ளதாகத் தெரிவிக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இவர்கள் அனைவருக்கும் தான் பதில் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (03) அமர்வில் கலந்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவரால் நிலையியற் கட்டளையின் 27/2 வினாவுக்கு பதிலளிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் எனவும் கூறினார்.

இதேவேளை சஜித் இதுவரையில் கொரோனா வைரஸ் தொடர்பில் 11 தடவைகள் தன்னிடம் வினவியுள்ளதாகவும், அதேபோல ஏனைய எம்.பிகளும் 15 தடவைகள் இதுத் தொடர்பில் தன்னிடம் வினவினார்கள். அனைவருக்கும் தான் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சஜித், கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு காலஅவகாசம் கோருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும், அரசாங்கம் இந்த விடயத்தில் அப்டேட் இல்லையா? என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் 24 மணித்தியாலங்களிலும் பதிலளிக்க சுகாதார அமைச்சர் தயாராக இருக்க வேண்டுமெனவும், கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகள் மீது மக்கள் நம்பிக்கைக்கொள்ள செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .