Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2022 மே 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கையில் ஏற்பட்ட நிலை போன்று இந்தியாவிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது” என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்கள் போராட்டங்களால் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பதவியில் இருந்து விலகும் நிலைஏற்பட்டுள்ளது.
மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை இலங்கை வாழ் மக்கள் உணர்த்தியுள்ளனர் என்றார்.
ஈவு இரக்கமின்றி இனவெறி ஆட்டம் நடத்தி, ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷவுக்கு சிங்கள இனத்தைச் சார்ந்த மக்களே பாடம் புகட்டும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை. ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற பெயரில் அனைத்தையும் ஒற்றைத் தன்மைக்கு இட்டுச்செல்லும் போக்கு இங்கே வலுபெற்றுள்ளது. இலங்கையில் நிகழ்ந்ததை இங்கே இருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago