R.Maheshwary / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி.கபில
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் பெண்ணொருவர், ஹெரோயின் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
38 வயதான குறித்த பெண், பொலன்னறுவையைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கட்டுநாயக்க பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெராயின் தனித்தனியாக சுற்றப்பட்டு, சிறிய பொட்டலங்களில் இந்த அழகுசாதனப் பொருட்களுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (1) கட்டுநாயக்க பிரதேசத்தில் காரில் வந்த நபருக்கு ஹெரோயின் அடங்கிய தைலப் பொதியை வழங்க முற்பட்ட வேளையில் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இந்த பெண்ணை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினம் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
4 minute ago
9 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
22 minute ago