2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

‘வேட்டிக்குள் நுழைந்து ஒளிந்து கொள்ளமாட்டேன்’

Ilango Bharathy   / 2021 ஜூலை 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொட்டும் வேண்டாம்; அரசாங்கமும் வேண்டாமென, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக வெளியேறிய தான், ஒருபோதும் அவர்களின் ஆடைக்குள் சென்று ஒளிந்துகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின்  எம்.பியான குமார வெல்கம, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் முகமூடி அணிந்துகொண்டு அரசாங்கத்துக்குள் செல்லமாட்டேன் என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் மக்களுடைய ஆதரவும்
கிடைக்கும் எமது ஆதரவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்கும் எனத் தெரிவித்த அவர்,
அவர்கள் எதிர்பார்த்தது இந்த அரசாங்கத்தில் நிறைவேறியதா எனவும் கேள்வியெழுப்பினார்.

“ ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆயிரக்கணக்கான பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கேனும் இன்று இடமில்லை. அவர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை.
அபிவிருத்திப் பணிகளில் கூட அவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை ”என்றார்.

எனவே, ஒருநாளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல
மாட்டார்கள் என தெரிவித்த அவர், இது மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்றார்.
தேவையென்றால் அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி விலகியருக்கலாமே.

ஆனால், தேர்தலுக்குச் செல்லும் வரை எவரும் இந்த அரசாங்கத்திலிருந்து வெளியேற மாட்டார்கள் என்றார். சந்திரிகாவின் காலத்தில் வலு சக்தி அமைச்சின் பிரதி அமைச்சராக தான் இருந்தபோது எரிபொருள் விலையேற்றம் அமைச்சால் அல்லாமல், நிதியமைச்சர் தலைமையிலான குழுவே தீர்மானிப்பதாக தான் அறிந்துகொண்டேன் எனத் தெரிவித்த குமார் வெல்க எம்.பி, அந்தக்குழுவில் நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்திருந்தால், அதற்கு ஆதரவாக தான் வாக்களித்திருப்பேன். ஆனால், பக்கவாத்தியம் அடிப்பவருக்கு எதிராக வாக்களிப்பதில் எவ்விதப் பயனுமில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .