2021 ஜூலை 31, சனிக்கிழமை

சக்தி தொலைக்காட்சி நிறுவன தாக்குதலில் 2 பேர் காயம்:16 பேர் கைது;பின்னணியில் பிரதி அமைச்சர்?

Super User   / 2010 மார்ச் 22 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான மகாராஜா தொலைக்காட்சி (சக்தி தொலைக்காட்சி) நிறுவன தலைமையக கட்டிடத்தை சுற்றி தற்போது பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின்போது சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இன்று மாலை இனந்தெரியாத கும்பலொன்று சக்தி தொலைக்காட்சி நிறுவன தலைமையகத்தின் மீது கற்களை வ்விசி தாகுதலை மேற்கொண்டுளது.

சக்தி நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள் அதே கற்களினால் பதில் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.

தாக்குதலை நடத்தியோரின் பின்னணியில் சண்டித்தனத்துக்குப்பெயர்போன பிரதி அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை சுமார் 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .