2022 ஜனவரி 22, சனிக்கிழமை

‘கலகம் மூட்டினால் 10 வருடங்கள் சிறை’

Editorial   / 2018 மார்ச் 09 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி  

2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை உடன் அமுல்படுத்தி, இனங்களுக்கிடையில் கலகத்தை மூட்டுபவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் உடன் முன்னெடுக்க வேண்டும் என்று, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில், நேற்று(08) நடைபெற்ற மதுவரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து தெரிக்கையில்,   

பிளவுபடாத நாட்டை எதிர்கால சந்திதியினருக்கு கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறு பிளவுபட்ட நாட்டை எதிர்கால சந்ததியினருக்கு கையளித்தோமானால், அதற்கான நட்டஈட்டை நாம் செலுத்தியாக வேண்டும்.  

ஓரிரு இனவாதிகளின் செயற்பாடே, முழு நாட்டையும். தீக்கிரையாக்கி வருகிறது. எனவே, தீவிரவாத, இனவாத்ததை தூண்டும் வகையில் செயற்படும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். தேசிய வாதம் என்பது வேறு. ஆனால். அதற்காக, வேறொரு இனத்தை நசுக்கும் வகையில் செயற்படுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X