2022 மே 20, வெள்ளிக்கிழமை

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிப்பு

J.A. George   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலாவதியாகும்  சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .