2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

திருடனால் திருடர்களைப் பிடிக்க முடியாது

Simrith   / 2023 ஜூன் 04 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதிருக்கும் ஜனாதிபதிக்கு திருடர்களைப் பிடிக்க முடியாவிட்டாலும் அந்தத் திறன் ஐக்கிய மக்கள் சக்திக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   

நாடு வங்குரோத்தடையக் காரணம் நாட்டு மக்களல்ல. நாட்டு வளங்களை திருடிய ராஜபக்ச ஆட்சியினால் தான் எனவும் , திருடர்களை நம்பி வாழும் தலைவரால் திருடர்களை பிடிக்க முடியாது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கமிஷன் மற்றும் லஞ்சத்தில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பது மற்றும் பண்டோரா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்களை மீளப் பெறுதல் மாத்திரமே நாடு இருக்கும் திவால்நிலையிலிருந்து மீள்வதற்கு எளிதான வழி என உடவக பத்துட திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம மோடி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அந்த பணத்தை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பதே நாட்டுக்கு தேவை எனவும், ஆனால் நாட்டை அழித்த ராஜபக்ச குடும்பத்தையும் அவர்களின் விசுவாசமான எம்.பி.க்களையும் பாதுகாப்பதே திருடர்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் அடிப்படையாகவுள்ளது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .