2022 ஜூலை 07, வியாழக்கிழமை

இன்று மேலும் 21 நகரங்களின் கடைகளுக்கு பூட்டு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று (19) மேலும் 21 நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு, அந்தந்த நகர வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த நகரங்களில் மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் 58 நகரங்களில் உள்ள கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் மொத்தமாக அதன் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

 அதன்படி, வாரக்காபொல, வாரியபொல, துனகஹ, குளியாபிட்டிய, கம்புருபிட்டிய, உருபொக்க, பாதுக, எஹெலியகொட, மெதகம, ஹன்ஹமுனுவ, கிளிநொச்சி, திஸ்ஸமஹாரரம, வீரவில, பன்னேகமுவ, யோதகண்டிய, தெல்கொட, ஹிக்கடுவ, ஹபராதுவ, படல்கும்புர, காலி உடுகம,  ஹசலக ஆகிய நகரங்களின் கடைகளே, இன்று (19) முதல் மூடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .