2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

தாக்குதல் விவகாரம்; டி.ஐ.ஜிக்கு இடமாற்றம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) ரன்மல் கொடித்துவக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் மருத்துவ வழங்கல் மற்றும் நலன்புரி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எஸ். பி. எம். குணரத்ன, சப்ரகமுவ மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமையவே பொலிஸ்மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X