2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

ஒமிக்ரோனை ஃபைசர் கட்டுப்படுத்துமா?

Freelancer   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே கொரோனா தொற்று வீரியமடையாமல், இப்போதுள்ள தடுப்பூசிகள் பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரோன் திரிபின் முதல் கட்ட ஆய்வகப் பரிசோதனையில், ஃபைசர் தடுப்பூசி அதன் தாக்கத்தை ஓரளவுக்குத் தடுப்பதாகத் தெரிகிறது. 

புதிய ஒமிக்ரோன் திரிபு தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பான்களை, குறிப்பிடத்தக்க அளவில் கடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் மைக் ரயான்,

ற்ற திரிபுகளைவிட ஒமிக்ரோன் திரிபு, தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பை கடப்பதாக எந்த அறிகுறியும் இல்லையென்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா மற்றும் இதர திரிபுகளைவிட, ஒமிக்ரோன் திரிபு மக்களுக்கு தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தவில்லை என்று ஆரம்பக்கட்ட தரவுகள் பரிந்துரைப்பதாகக் கூறினார். 

தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் திறனிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒமிக்ரோனின் திறன், 'முழுமை பெறவில்லை' என ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஆப்பிரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் அலெக்ஸ் சிகல் கூறினார். 

12 பேரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, ஒமிக்ரோனில் தான் எதிர்பார்த்ததைவிடச் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 

நோய்த் தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக்கொள்வது அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது, நோய்த் தொற்றை குணப்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும், அதே போல தீவிர நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வாய்ப்பும் அதிகம் என கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X